Saturday, February 19, 2011

நெருங்குகிறது சிபிஐ; நெருக்குகிறது காங்....

நெருங்குகிறது சிபிஐ; நெருக்குகிறது காங்.



இந்தியாசெய்தி


Monday, February 14th, 2011


தமிழக அரசியலில் நாளும் ஒரு திடுக்கிடும் திருப்பங்கள் நடந்து வருகின்றன.


சென்னையில் காங்கிரஸ் பேராளர்கள் திமுக தலைவரைச் சந்தித்துக் கூட்டணி இடங்கள் பற்றி பேசிய வேளையில், டெல்லி யில் மேலிட காங்கிரஸ் விஜயகாந் தின் தேமுதிகவுடன் பேச்சு நடத்திய தாகத் தகவல் சாதனங்கள் கூறின.


இதையடுத்து, எதை நம்வுவது என்று புரியாமல் அரசியல்வாதிகள் முதல் தொண்டர்கள்வரை எல் லாரும் குழம்புவதாகத் தெரிகிறது.


காங்கிரஸ் கட்சியுடன் கூடிய கூட்டுக்காகத் தனது பெரும் புள்ளி ராசாவை பலியாக்கத் திமுக முன் வந்துள்ளது.


முன்னாள் அமைச்சர் ராசா கைதாகி இருந்தாலும் கூட்டணி யில் பாதிப்பு இல்லை என்று இரு கட்சிகளும் நாள்தோறும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றன.


என்றாலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் சிபிஐ புலனாய்வு அமைப்பு, ராசாவைக் கடந்து திமுகவுக்குள் நுழைவதை அந்தக் கட்சி விரும்பவில்லை.


ஆனால் சிபிஐ அமைப்பு முதல் வர் கருணாநிதியின் வீட்டுக் கதவு வரை வந்துவிட்டது என்று நம்பப் படுகிறது. கலைஞர் டிவியின் உரிமையாளர்களில் ஒருவரும் திமுக தலைவரின் புதல்வியுமான கனிமொழியிடம் விரைவில் தீவிர விசாரணை நடக்க இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலை ஏற்படும்பட்சத்தில் திமுகவின் பொறுமை பெரும் சோதனைக்கு உட்டுபத்தப்படும் என்றும் அதன் விளைவாகத் திமுக கடும் சித்தப்போக்கைக் கைக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறிக்கும் நிலைகூட ஏற் படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.


திமுக இந்த முடிவை எடுத்தால் காங்கிரஸ் கட்சிக்குத் திரிசங்கு சொர்க்கம் நிலைதான் ஏற்படும்.


இதனைத் தவிர்த்துக்கொள்ள காங்கிரஸ் தயாராகிறது என்றும் திமுக கைவிடும் பட்சத்தில் தேமுதிக, பாமகவுடன் கூட்டணி சேரலாம் என்று காங்கிரஸ் காய் களை நகர்த்துகிறது என்றும் டெல்லியில் தகவல் சாதனங்கள் தெரிவிக்கின்றன.


அதேவேளையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தொடர திமுக வின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அவசியமாக இருக்கிறது.


ஆகையால் ஸ்பெக்ட்ரம் விவ காரத்தில் வசமாகச் சிக்கி இருக் கும் திமுகவை தன் கைப்பாவை யாக ஆக்கிக் கொள்ள காங்கிரஸ் முயல்கிறது என்று தெரிகிறது.


தமிழகத் தேர்தலில் திமுகவை கைவிட காங்கிரஸ் தயாராக இல்லை. திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே காங் கிரஸ் வியூகங்களை அரங்கேற்று கிறது என்று சென்னையில் தகவல் கள் தெரிவிக்கின்றன.


கூட்டணியில் 80 இடங்களை காங்கிரஸ் கேட்கிறது என்றும் கூட்டணி வென்றால் திமுக - காங்கிரஸ் கூட்டு அரசு அமையும் என்று இப்போதே திமுக அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ்காரர் கள் கோரிக்கை விடுகிறார்கள்.


திமுகவோ, காங்கிரசைக் கைவிடவும் முடியாமல் அந்தக் கட்சிக்கு அது கேட்கும் அளவுக்கு இடங்களை ஒதுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் தவிக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


தமிழக அரசியலில் திமுக எத்தனையோ சுனாமிகளைச் சந்தித்து தப்பி இருக்கிறது.


ஆனால் இப்போது அடிக்கும் காங்கிரஸ் சுனாமியில் அந்தக் கட்சி சிக்கிவிட்டது என்னமோ உண்மை. இருந்தாலும் எதை யாவது பலிகடாவாக்கி திமுக தப்பிவிடும் என்று கட்சியினர் சொல் கிறார்கள். அந்த பலிகடா காங்கிரஸ் கட்சியாகக் கூட இருக் கலாம் என்பது அரசியல் கவனிப் பாளர்கள் கருத்து. .

No comments:

Post a Comment