Thursday, August 26, 2010

ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்......


'

                                                                சிறுகதை









யோ.கர்ணன்,ஓவியங்கள் : ஸ்யாம்



ஆதிரைக்கு விரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது





மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே. வாறவன் எப்படிப்பட்டவனோ?



இவள் படிக்கிற காலத்தில ரைப்பிங் பழகின வள்தான். அப்போது எல்லாம் இல்லாத வேகம் ரைப்ரைற்றர் இல்லாத இந்த நேரத்தில வருது. என்ன இருந்தாலும், இவள் லேசாகப் பயந்த பெட்டைதானே. இப்படி ஒரு காட்டுக்குள் முந்திப்பிந்தி பெட்டை உள்ளட்டதே கிடையாது.



இவளின்ர இடம் முள்ளியவளை. முள்ளியவளை யில் இருந்து நெடுங்கேணிப் பக்கம் போனாலோ, குமுழ முனைப்பக்கம் போனாலோ, அல்லது காட்டுவிநாயகர் கோயிலடி கழிந்தாலோ காட்டைப் பார்க்கலாம்தான். ஆனால், வலு கண்டிப்பான வீட்டில இருந்த பெட்டை படிக்கிற காலத்தில உங்கெல்லாம் ஏன் திரியுது?



முள்ளியவளைத் தெரியாதவைக்கும் வித்தியானந்தா கொலிச் எண்டதொரு பேர் காதில அடிபட்ட நினைவிருக்கலாம். அந்த ஏரியாவில் ஃபேமஸ் ஆனபள்ளிக் கூடம் அதுதான். இவளும் அதில் தான் படிச்சாள். இந்த சம்ப வத்தை விதி என்பதா... சதி என்பதா என்று தெரியாமல்தான் பெட்டையின்ற ஃபேமிலி இன்று வரை இருக்குது. அப்படி ஒரு சம்பவம் நடந்தது.







சுந்தரலிங்கமோ, வைத்தியலிங்கமோ என்பது மாதிரியான ஒரு பெயருடன் நல்ல பெரிய ஸ்ரேஜ் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்தது. அந்த ஏரியாவில் பட்டிமன்றம் நடந்தாலும் சரி, இயக்கத்தின்ர பிரசாரம் நடந்தாலும் சரி, அங்குதான் நடக்கும்.



ஒருநாள் இயக்கம் அங்கு தெருக்கூத்துப் போட்டது. அந்தக் காலத்தில நாலைந்து தெருக் கூத்து கோஷ்டிகள் இருந்தன. எல்லோரும் பஞ்சவர்ண கலர் களில உடுப்புப் போட்டு வருவினம். கொஞ்சப் பேர் சிவப்பு, மஞ்சள் கரை உடுப்போட வருவினம். பெட்டை முன் வரிசையில் இருந்து பார்க்குது.



அது ஜெயசிக்குறுக் காலம். வவுனியாவில இருந்து வெளிக்கிட்டு கண்டி வீதியைப் பிளக்கிறதுதான் ரத்வத்தையின்ர திட்டம். இயக்கம் விடேலை. வந்த ஆமி மாங்குளம் கடக்க மாட்டாமல் நிக்குது. தெருக்கூத்தில இதனை அருமையாகச் சித்தரிச்சினம். நிறையப் பேர் பச்சை உடுப்புக்களுடன் (சிங்களவர்) பாய்ந்து வருகினம். சிவப்பு, மஞ்சள் தரப்பு (இயக்கம்) பின்னுக்குப் பின்னுக்கு வந்து மேடையின் விளிம்பில நிக்கினம். இன்னும் கொஞ்சப் பேர் இதொண்டிலும் சம்பந்தம் இல்லாமல் சமைச்சுச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கினம் (வன்னிச் சனமாம்).



அந்த நேரம் மேடையில ஓராள் வந்து, அந்தக் கால ரி.ஆர்.மகாலிங்கத்தின்ர குரலில பாடத் தொடங்கும். 'பார்வையா ளரா இருக்காமல் பங்காளராகு வோம். எல்லோரும் சேர்ந்து இறுதி யுத்தத்தை வெல்வோம்' எனப் பாட்டின் சாரம் இருந்தது. பாட் டைக் கேட்டு சமைச்சுக் கொண்டு இருந்த ஆம்பிளையள், பொம்பிளையள் எல்லாம் சேர்ந்து பச்சை உடுப்புக்காரரை ஒரு தள்ளுத் தள்ளுவினம். பச்சை உடுப்புக்காரர் பிடரி அடிபட விழுகினம். ஒருவன் புலிக் கொடியுடன் அணி நடையில் வந்தான். இதுதான் அன்றைய தெருக்கூத்து.



முன் வரிசையில இருந்த பெட்டை தள்ளுறவையோட சேர்ந்து தானும் ஒரு கையினால் சின்ன புஸ் பண்ணி பச்சை உடுப்புக்காரரை விழுத்திப்போட்டு, சுதந்திர மண்ணில் படிப்பை கொன்ரினியு பண்ணுவம் என யோசித்தாள்.



அடுத்த நாள் ரியூசனுக்குப் போனவள் வீட்டுக்குத் திரும் பேல. முள்ளியவளை அரசியல் துறை பொறுப்பாளரின் ஸ்கோ ரில் ஒன்று கூடியது. அந்த நேரம் அரசியல் துறையில் ஒரு நடைமுறை இருந்தது. 10 பேரை இயக்கத்துக்குச் சேர்த்துக் குடுத்தால், சேர்க்கிறவருக்கு புது சைக்கிள் குடுப்பினம். இவளையும் சேர்த்து பத்தாக்கி யார் சைக்கிள் வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இவள் நாலு மாதம் றெயினிங் எடுத்து தகடு, குப்பி, ஒரு துவக்கு, 120 ரவுண்ஸ், இரண்டு ஜே.ஆர். குண்டு வாங்கினாள்.



இவளுக்குக் கிடைத்தது ரி. 56 துவக்கு. துவக்கு வகைகளுக்குள்ளயே பழைய கிழவியள் மாதிரி கொஞ்சமும் ஸ்ரைல் இல்லாத துவக்கெண்டால், இந்தியனின் எஸ்.எல்.ஆரும் சைனாக்காரனின்ட ரி 56-ம்தான். ஆனாலும் என்ன தண்ணி, சேறு, புழுதி எதுக்கை போட்டெடுத்து அடிச்சாலும் இது குழப்படிவிடாமல் சொல் பேச்சுக் கேக்கும் என்று கிடைத்ததை வைத்துத் திருப்திப்பட்டுக்கொண்டாள்.



றெயினிங் முடிய இவளின் ரீம் போனது அம்பகாமம் காட்டுக்கு. ஜெயசிக்குறு ஒப்பரேசன் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அந்த நேரம் அறிவிக்குது. அறிவித்த கையோட றிவிபல ஒப்பரேசன் தொடங்குது. மாங்குளத்தில இருந்து கிழக்குப் பக்கம் போகும் வீதியில, ஒட்டிசுட்டான் மட்டும் ஆமி. காட்டுக்குள்ளால முத்தையன்கட்டுப் பக்கம் ஆமியை வர விடாமல் தடுக்கும் பொறுப்பு இவளின் ரீமுக்கு.



இவளின்ர ரீம் காட்டுக்குள்ள 500 மீற்றருக்கு ஒரு பொசிசன் போட்டினம். ஆட்கள் தொகை காணாதது காரணம். ஒரு பொசி சன்ல நாலு பேர். காட்டுக்குள்ள 500 மீற்றர் இடைவெளி என்பது கொஞ்சம் ஓவர்தான். ஆமிக் காரன் புகுந்து விளையாடுவான்.



இப்படியான சிற்றிவேசனில 18 நாட்களைக் கடத்திவிட்டாள். இப்பதான் மெயின் ஸ்ரேசனில இருந்து மெசேஜ் வருது. ஆமி மூவ் பண்ணப் போறானாம். எல்லாப் பொசிசனிலயும் சண்டைக்கு ரெடியாகட்டாம். இவளும் கண்ணுக்குள் காப்போத்தில் நல்லெண்ணெய் ஊற்றின கணக்காக வலு கவனமாக வோச் பண்ணிக்கொண்டு இருந்தாள். கொஞ்ச நேரத்தில தூரத்தில் ரவுண்ஸ் சத்தம் கேக்கத் தொடங்குது. சரி, ஆமிக்காரன் ஸ்ராட் பண்ணிட்டான். நாமும் ஆரம்பிக்க வேண்டியதுதான் என இவள் துவக்கின் சேப்ரி பின்னைத் தட்டினாள். லீடர் பெட்டை சீறி விழுந்தாள். "ஆமிக்காரன் கண் காணாத இடத்தில நிக்கிறான். நீ என்ன சத்த வெடியா வைக்கப்போறாய்?" என. "சரி கிட்ட வரட்டும். நல்லா எய்ம் பண்ணி அடிப்பம்" என இருந்தாள்.



சத்தம் மெள்ள மெள்ள கிட்டவாக வருது. வோக்கியில மாறி மாறி நாலைந்து பேர் கொமாண்ட் பண்ணிக்கொண்டு இருக்கினம். எல்லோரும் ஒரு விஷயத்தைத்தான் சொல்லுகினம். "ஒருத்தரும் பயப்பிடாதயுங்கோ... ஆமிக்காரன் கிட்ட வரட்டும். நல்லாக் குடுங்கோ... ஒருத்தரும் தப்பக் கூடாது."



இப்போது இவளின் தலைக்கு மேலாக ரவுண்ஸ் சீறிக்கொண்டு போகுது. லீடர் பெட்டை, "வந்திட்டான் அடி... அடி" எனக் கத்துறாள். இவள் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ஆமியின் அசுமாத் தம் தெரியுது. சேப்ரியைத் தட்டி ரிகரில கைவைக்க மட்டும்தான் பெட்டைக்கு விரல் ரைப்படிச்சதும் ரென்சனும்.



பிறகு, பெட்டை வலு திறமான சண்டைக்காரி யாகினாள். சண்டை கனநேரமாக நடக்குது. இவ ளுக்கு வலது பக்கத்தில இருந்த இரண்டு பொசிசனும் ஆமியிடம் விழுந்துவிட்டதாக வோக்கியில மெயி னுக்கு அறிவிக்கினம். என்ன நடந்தாலும் பொசி சனில இருந்து பின்னுக்குப் போவது இல்லை என பெட்டையள் முடிவெடுக்கினம். இவையின் பொசி சனை அரை வட்டமாக ஆமி சுற்றிவளைத்துவிட் டான். ஆர்.பி.ஜி., பீ.கே. என சகல அஸ்திரங்களையும் ஆமிக்காரர் பயன்படுத்துகினம். பெட்டையளும் விடுகிறதா இல்லை.



போகப் போக நிலைமை இறுகத் தொடங்குது. இன்னும் இரண்டு மூண்டு பொசிசன் ஆமியிடம் போகுது. ஆபத்தான வேலைதான். இந்த ஏரியாவில இந்த நாலு பெட்டையளும்தான் நிக்கினம். மெயி னில இருந்து இவைக்கு கொமாண்ட் வந்தது. 'உந்தப் பொசிசனைவிட்டு உடனே பின்னுக்கு வாங்கோ' என. லீடர் பெட்டை இவளைப் பார்த்தாள். இவள் வோக்கியைப் பறித்தாள். "மெயின் மெயின்... என்ன நடந்தாலும் நாங்கள் பின்னுக்கு வர மாட்டம். விட்ட பொசிசன்களைப் பிடிக்க றை பண்ணுங்கோ, நன்றி."



இயலுமான வரை தாக்குப் பிடிப்பம் என நாலு பெட்டையளும் நிக்கினம். நாலு பெட்டையள முடிக்க 40 ஆம்பிளையள் சுத்தி நிக்கினம். ஆனாலும், பெட்டையள் உசும்பினமில்லை. திடீரெனப் பின்னுக்கு இருந்தும் அடி வருது. அநேகமாக அதொரு பீ.கே. ஆக இருக்க வேணும். பெட்டையளின் தலைக்குள் மின்னல் அடித்தது. நாலு பக்கமும் வளைத்து பொக்ஸ் அடித்துவிட்டானா?



இவள்தான் பின் பக்கம் கவனித் தாள். பின்னால் இருந்த பாலை மரத்துடன் இருந்து ஒருவன் பீ.கே. அடிக்கிறான். கொஞ்ச நேரம் சமாளிக்கலாம். ஆனால், தொடர்ந்து சண்டை பிடிக்க முடியாத நிலை வருது. நாலு பேரிடமும் இருந்த ரவுண்ஸை எண்ணினால் 50தான் வரும். 50 ரவுண்ஸ் என்பதுஏ.கே-யை ஓட்டோவில விட்டு, ரிகரில் விரலை வைத்து கண்ணை ஒரு முறை மூடித் திறக்க காலியாகிவிடும். இவளிடம் ஒன்று இன்னொருத்தி யிடம் ஒன்று என மொத்தம் இரண்டு குண்டுகள்தான் இருந் தன.



"சரி, நடக்கிறது நடக்கட்டும்... இயலுமான வரை முயலுவோம். கண்டபடி ரவுண்ஸை வீணாக்காமல் ஆமி பங்கருக்க உள் நுளைய முயன்றால் மட்டும் சுடுவம்" என முடிவெடுத்தனர். எதிர்ப் பக்கம் இருந்து சூடு வருவது குறைந்ததும் ஆமிக்காரரும் உற்சாகமாயிற்றினம். பெட்டையள் எண்டாலே ஆமிக்காரர் வலு எழுப்பமாகத்தான் நிற்பினம். இதுக்குள்ள சுடுறதுக்கு ரவுண்ஸும் இல்லை என்றால் கேட்கவும் வேணுமா?



மிக அண்மையில் நிலையெ டுத்திருந்த ஒருவனை நோக்கி ஒருத்தி குண்டு ஒன்றை எறிந் தாள். இப்பொது ஒரே ஒரு குண்டு மட்டும் எஞ்சியிருந்தது.



எல்லாப் பெட்டையளின் முகமும் இருண்டுவிட்டது. இனி செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. இனியும் தாமதித்தால், தலை மயிரிலை பிடிச்சுத்தான் இழுத்துக்கொண்டு போவான். இறுகிய குரலில் லீடர் கேட்டாள், "என்ன செய்வம்?" எல்லோரும் அமைதியாக இருந்தனர். லீடர் சொன்னாள், "நான் உயிரோடு பிடிபட மாட்டன். குண்டை என்னட்ட தா. நான் குண்டடிக்கப்போறன்."



"நானும் உயிரோடு பிடிபடமாட் டன்" இவள் சொன்னாள். மற்ற இருவரும் இதே முடிவை எடுத்தனர்.



ஒரு குண்டைவைத்து நால்வரும் இறந்துபோவது எனத் தீர்மானித்தனர். இவளிடம்தான் குண்டு இருந்தது. இவள் கிளிப்பைக் கழட்டி நாலு பேருக்கும் நடுவில் போடுவாள். அது ஆறு செக்கனோ எட்டு செக்கனோ இதுகளின்ர தலையில என்ன எழுதியிருக்கோ, அந்த நேரம் வெடிக் கும். இந்த நேரம் புதிதாக வெடிச் சத்தங்கள் கேட்டன. "எங்கட ஆக்கள் வந்திட்டினம்போல" ஒருத்தி சொன்னாள். "ம்... இறங்கீட்டினம் போலத்தான் இருக்குது. ஆனால், அவயள் வாறதுக்கிடயில எங்களைப் பிடிச்சுக்கொண்டு போயிடுவான். இனியும் லேற் பண்ணக் கூடாது."



தங்களை மீட்க ஒரு அணி வருகிறது என்பது நால்வருக்கும் புரிந்தது. ஆனால், அதற்காகத் தாமதிப்பதால் பலன் கிடைக்குமா என்பதை நிச்சயம் செய்ய முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தனர். "நீ கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போடு" - லீடர் இவளுக்குக் கட்டளையிட்டாள். இவள் கண்ணை மூடிக்கொண்டு குண்டை எடுக்கவும் லீடர் வோக்கியில் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" சொன்னாள்.



இவள் கிளிப்பைக் கழட்டி குண்டைக் கீழே போட்ட கணத்தில், வோக்கியில் பொறுப்பாளரின் குரல் ஒலித்தது. "பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ. நாங்கள் வந்திட்டம். உங்களுக்குப் பின்னால இருந்த பீ.கே-காரனையும் போட்டிட்டம். நாங்கள் வந்திட்டம்."



மிகுதி என்ன சொல்லப்பட்டது என்பது இவளுக்கு விளங்கவில்லை. உதவி அணிகள் பக்கத்தில் வந்தும் அவசரப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் லீட ரைப் பார்க்க, அவள் பேயறைந்து போய் நின்றாள். கணம்தான். இவளது மூளைக்குள் மின்னல் வெட்டியது. பாய்ந்து குண்டின் மேல் படுத்தாள். ஆறு செக்கனோ, எட்டு செக்கனோ தெரிய வில்லை. குண்டு வெடித்தோய, இவளது உடல் சிதறல்கள் படர்ந்திருக்க... மற்ற மூவரும் விறைத்து நின்றனர்!

Saturday, August 21, 2010

தியாகம் திரைப்பாடல்.

                "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு"



Friday, August 20, 2010

வன்னி நாடு

இலங்கையின் வடக்குப்பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை இணைத்ததே வன்னியாகும். வடக்கே கிளிநொச்சியையும் தெற்கே மதவாச்சியையும் மற்றைய கிழக்கு மேற்கு பகுதியை கடலாகவும் கொண்டபிரதேசமே வன்னியாகும். வாழையடி வாழையாக வள்ந்து வரும் வன்னியின் வரலாறுகள் இன்னும் புரியாத புதிராகவே இருப்பினும் இன்று ஆங்காங்கே கண்டுபிடிக்கப்படும் சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை எமக்கு அறிவிக்க முற்படுகின்றது.



ஆனால் அதை ஆராய்வதற்கு எவரும் தயாராகவில்லை என்பது வேதனைக்குரிய விடையமாகும். தமிழர் தாயகத்தின் பெருநிலப்பகுதியான வன்னிமண் பல சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் அடித்தளமிட்ட மண்ணாகும். இயற்கை அன்னையால் அரவனைக்கப்பட்ட வன்னித்தாய் தன்னை நம்பி வந்த எவரையும் கைவிட்டதாக எந்த சரித்திரமும் கூறவில்லை. பண்டாரவன்னியனின் ஆட்சிக்கு முன் வன்னியில் என்ன நடந்தது?



வன்னி எவ்வளவு பழமையானது என்பன இன்று எம்முன்னே எழும் வினாக்களாகும். இந்த வினாக்களுக்க விடை தேட யாரும் தயாராய் இல்லை என்பதே உண்மையாகும். பண்டாரவன்னியனின் நு}ல் கூட ஒரு வாய் மொழிக்கதையின் உறுதிப்படுத்தப்பட்ட அச்சுப்பதிப்பே. திரு.முல்லைமணி வே.சுப்பிரமணியத்திற்கு முன்னையோர் வன்னியின் தொன்மையை அறியமுற்படவில்லை. சிலவேளை அவர்கள் முயற்சி செய்திருந்தால் வன்னியின் தொன்மை களை இலகுவாய் அறிந்திருக்க முடிந்திருக்கலாம். திரு.முல்லைமணி மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பண்;டாரவன்னியனது சிலை நிறுவப்பட்டுள்ளது. வன்னியின் அமைவிடத்தைப் பார்ப்போமானால் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் கடலோர பிரதேசங்களாகும். வன்னியின் ஒவ்வொரு பிரதேசமும் தமக்கென ஒரு சிறப்பைக்கொண்டவையாகும். மன்னார் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஈழத்து ஈச்சரங்களில் ஒன்றான திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. அத்தோடு அதிலிருந்து கிட்டத்தட்ட 40மஅ து}ரத்தில் மடுமாதா கோவில் இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான கட்டுக் கரைக்குளம் அமைந்துள்ளது. அத்தோடு இது ஓர் கரையோரப்பிதேசமாகும். மன்னாரிலிருந்து தென்னிந்தியா 32மஅ மட்டுமே. மன்னாரின் மண் மற்றும் நீர் உவர்ப்புத்தன்மையுடையது அடுத்து வவுனியா மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால் வவுனியா மாவட்டதில் பிரசித்தி பெற்ற புது}ர் நாதம்பிரான் ஆலயமும் சடவன்குளம் ஐயன் கோவிலும் உண்டு அத்தோடு ஆலயங்கள் நிறைந்த பிரதேசமாக வவுனியாமாட்டம் திகழ்கிறது.அதுமட்டுமலல்லாமல் கனகராஜன் ஆறு இதனு}டே பாய்கிறது. அத்தோடு ஈழத்தின் பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் இங்கே தான் அமைந்துள்ளதுஇன்று வடக்கின் வர்த்தக தலைநகராக வவுனியா திகழ்கிறதுஅத்தோடு தமிழீழத்தின் கிழக்கு எல்லையாகவும் வவுனியா திகழ்கிறது. அடுத்து நாம் முல்லைத்தீவுக்கு செல்தோமாயின் அங்கே உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமை மிகு ஆலயமான வற்றாப்பளை(பத்தாப்பளை)கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.அத்தோடுஈழத்து தான்தோன்hPச்சரங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்hPச்சரம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல ஆங்கிலேயரினால்; பண்டாரவன்னியனின் நினைவுக்கல் இம்மாவட்டத்தில்த்தான் நிறுவப்பட்டது.அது இன்றும் கற்சிலை மடுவில் பனை வடலிகளின் மத்தியில் காணப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மற்றுமோர் சிறப்பம்சம் ஈழத்தின் மிகப்பெரிய குளங்களான முத்தையன் கட்டுக்குளம் மற்றும் தண்ணீர்முறிப்புக்குளம் என்பன அமைந்துள்ளமையாகும். அத்தோடு தென்னைவளம் நிறைந்த பிரதேசமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் மிளிர்கிறது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது வன்னி ஓர் விவசாயப்பிரதேசம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தோடு வன்னியிலே இந்து மற்றும் கிறிஸ்த்தவர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்துள்ளனர் என்பது புலனாகிறது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் போது எம்முள் சில கேள்விகள் எழாமல் இல்லை.



>> பண்டாரவன்னியனின் வரலாறு கற்பனையா?நிஜமா? >> இவ்வாறு சிறப்பு மிக்க பிதேசம் ஏன் பிரசித்தி பெறாத நகரமாய் இருந்தது? >> ஏன் வன்னியின் தொன்மைகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை? >> ஏன் இப்பிரதேசம் இன்னும் தொல்பொருள் ஆராச்சிக்கு உட்படுத்தப்படவில்லை?



இதில் முதலாவது வினாவிற்கு நாம் விடையளிப்போமாயின் பண்டாரவன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக் கேள்வி எழுந்ததன் விளைவாய்த் தான் திரு.முல்லைமணியவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. பண்டாரவன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அதாவது வாய் மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்ப காலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச



விழிப்புணர்வினாலுமே பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் உண்டென்றும் உறுதிப்படுத்தப்பட்ட பின் தான் பண்டாரவன்னியனின் வரலாறு நு}ல்வடிவம் பெற்றது எனலாம்.இதனால் நாம் விளங்கிக் கொள்ளக் கூடியது என்னவெனில் பண்டாரவன்னியனது வரலாறு உண்மையானதென்பதே. இரண்டாவது வினாவிற்கு நாம் செல்வோமாயின் இலங்கையின் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களே பிரசித்தி பெற்ற பிரதேசங்களாக காணப்படுகிறது. இதற்குக் காரணம் அந்தப் பிரதேசங்களை கப்பல் தரித்து நிற்பதற்காய் ஆங்கிலேயர் பயன் படுத்தியமையே இதற்குச சான்றாக இப்பிரதேசங்களில் துறைமுகங்கள் காணப்படுவதை அவதானிக்கமுடியும்.இதனால் ஆங்கிலேயர் வன்னியை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளனர் எனலாம். வன்னியை கைப்பற்ற வேண்டுமென்பதோ பண்டாரவன்னியனை தோற்கடிக்க வேண்டுமென்ற அவசியமோ வெள்ளையனுக்கு இல்லை. அனாலும் இலங்கையில் சுகந்திரமான இராஜ்சியம் இருப்பதைஆங்கிலேயர் விரும்பவில்லை அல்லது வன்னியில் உள்ள சுகந்திர இராஜ்சியத்திலிருந்து தமக்கெதிரான கிளர்ச்சிகள் ஏற்படலாம் என்று அச்சப்பட்டிருக்கலாம் அதன் விளைவாய் வன்னி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்திருக்கலாம்.இதனால் வன்னியை ஆங்கிலேயர் பாதுகாப்பிற்காய் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. இதனால் வன்னியின் சில பகுதிகள் யாரும் அறியாத ஒன்றாக இருந்தது.அடுத்த வினாவிற்கு நாம் விடையளிபபோமாயின் வன்னியின் பாண்டைய கால வரலாறுகள் பேணிப்பாதுகாக்கப் படவில்லை என்பது உண்மையே. அதற்குக் காரணம் பண்டாரவன்னியனின் ஆட்சிக்குப் பின் ஆங்கிலேயரின் கொடுமைகளுக்குப் பயந்து எவரும் வன்னியின் தொன்மைகளை பாதுகாக்கப்படாமல் பேணிப்பாதுகாக்காமல் விட்டிருக்கலாம். 1796 தொடக்கம் 1948 வரையான பிரித்தானியர் ஆட்சியிலே வன்னியரின் தொன்மைகள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கலாம். ஆனால் வன்னியின் இன்றைய சான்றுகளாய் இருக்கும் ஆலயங்களும் குளங்களும் சுடுமண்கிணறுகளும் வன்னியின் தொழிநுட்ப திறனையும் வன்னியின் தொன்மையையும் எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை. நான்காம் வினாவிற்கு செல்வோமாயின் வன்னியின் தொன்மைகள் தொடர்பான ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. அதற்கான காரணம் 1948 வரை இலங்கை அன்னியர் ஆட்சியில் இருந்தமை. அதன் பின் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்னியின் தொன்மையை ஆராய்வதன் விளைவாய் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றாய் வன்னியை தாமே ஆதாரங்களுடன் நிரூபிப்பதாய் போய்விடும் என்று எண்ணியிருக்கலாம். அல்லது வன்னியின் அறிஞர்கள் வழங்கிய ஆதாரமற்ற தகவல்களை நம்பாமல் விட்டிருக்கலாம்.அதன் பின் இன்று வன்னி போர் நடக்கும் மையப் பகுதியாக வன்னி இருப்பதால் அதன்தொன்மைகள் இன்றும் பெரிதாய் ஆராய்விற்கு உட்படுத்தப்படவில்லை. ஆயினும் சிறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிது. ந்தவிளக்கங்களினால் உங்கள் வினாக்களுக்கு விடைகிடைத்திருக்கும் என நம்புகின்றோம்.இன்றைய வன்னியில் வறுமையும் பஞ்சமும் தலைது}க்கி ஆடுகிறது. நெல்விளைந்த வயல்கள் கண்ணிவெடிகளால் நிறைந்துள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது. ஆனால் வன்னியின் கல்வி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. வன்னி மாணவர்கள் கல்வியின் தேவையை அறிந்துள்ளனர் இதனால் மற்றைய பிரதேச மாணவர்களைவிட குறிப்பாக யாழ் மாணவர்களைவிட முன்னிலையில் நிற்க்கின்றனர். அத்தோடு பண்டார வன்னியனின் அதே வீரத்தோடு தமிழர் சேனை வன்னியில் நின்றுதான் தமிழீவிடுதலைப் போரட்டத்தின் மூலம் தமிழீழத்திற்கான அத்திவாரம் போடப்படுகிறது.

Thursday, August 19, 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

பாரமுல்லா மாவட்டத் தைச் சேர்ந்த 14 வயது வாமிக் ஃபாருக் குக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண். ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் நீல நிற யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான ஃபாரூக்கின் அப்பா வீட்டில் இல்லை. ஃபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெரும் சத்தம் வெளியே கேட்டது. மைசூனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது, அது துப்பாக்கிச் சூடு என்று. பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தார். அங்கே ஃபாரூக், தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான். ஒரே மகன் ஃபாரூக் அவர்களை விட்டுப் போய் விட்டான். இப்போது இந்திய ராணுவத்தை எதிர்த் துப் போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப் பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் அமர்ந்திருக்கிறார் மைசூன்.


"காஷ்மீரிகள் எதற்குச் சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் ஃபாரூக் இறந்த பிறகு எனக்கு எல் லாம் தெளிவாகப் புரிகிறது. எங்களுக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்!" என்கிறார் மைசூன். இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண் கள் இன்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயதுச் சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கை யில் கற்களைப் பொறுக்கி இளைஞர்களுக்குத் தரு கிறார். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்த கைய காட்சிகள் புத்தம் புதியவை!






"காஷ்மீரிகள் எதற்குச் சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் ஃபாரூக் இறந்த பிறகு எனக்கு எல் லாம் தெளிவாகப் புரிகிறது. எங்களுக்குத் தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்!" என்கிறார் மைசூன். இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண் கள் இன்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து 15 வயதுச் சிறுவன் கல் எறிகிறான். ஒரு முஸ்லிம் பெண் கை யில் கற்களைப் பொறுக்கி இளைஞர்களுக்குத் தரு கிறார். காஷ்மீரின் போராட்ட வரலாற்றில் இத்த கைய காட்சிகள் புத்தம் புதியவை!


பற்றி எரியும் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆனாலும், காஷ்மீரிகளின் போராட்டம் தொடர்கிறது. "இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கிகளால் சுட்டபோது 'அவற்றை பாகிஸ்தான் தருகிறது' என்றார்கள். இப் போது அந்த மக்கள் கற்களைக்கொண்டு போராடு கின்றனர். கற்களையுமா பாகிஸ்தான் தருகிறது?" என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச் னையில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் பேராசிரியர் கிலானி. ஐந்து லட்சம் ராணுவத் துருப்புகள், பல்லாயிரக்கணக்கான துணை ராணு வப் படைகள், உள்ளூர் போலீஸ் என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப் பட்டு இருக்கிறது. ஏன்... என்ன நடக்கிறது காஷ் மீரில்? அதற்கு காஷ்மீரின் வரலாறு கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்.


காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்னையோ, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார். அந்த நிலையில், பாகிஸ்தானின் பஸ்தூன் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர். அதைச் சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார். இப்படித்தான் காஷ் மீர் இந்தியாவுக்கு வந்தது. பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப் பில் மிக முக்கியமான அம்சம் என்பது 'காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்' என்பது தான். ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெ டுப்பு நடத்தப்படவில்லை. நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை. காஷ் மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி 'சுதந்திர காஷ்மீர்' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள். 50 ஆண்டு கள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980-களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடி வம் எடுத்தது. காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்ப தாலும், அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும் தந்திர மாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ் தான். அதன்பிறகு போராட்டம், தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இது தான்.

காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளருமான கோ.சுகுமாரனிடம் பேசியபோது, "இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை 'பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்' என்று இந்தியா சொல்கிறது. கீழ்ப் பகுதியை 'இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர்' என பாகிஸ்தான் சொல்கிறது. 'ஆனால், உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன' என்பதே பூர்வீக காஷ் மீரிகளின் முழக்கம். பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம் கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை. இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப் படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந் தவர்கள். காஷ்மீரின் முஸ்லிம்கள் 'சூஃபி' வகையைச் சேர்ந்தவர்கள். தங்களைத் தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் 'சுதந்திர காஷ்மீர்' கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையில் காஷ்மீரி களைப் பிரதிநிதிகளாகக்கூட அழைப்பது இல்லை. ஆனால், இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை 75 ஆயிரம் காஷ்மீரிகள் கொல் லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9 மணிக்கு மேல் விளக்கு ஏற்றக் கூடாது. அங்கு பயன்படுத்தப்படும் செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. (ஏனெனில், எஸ்.எம்.எஸ் தகவல்களைக் கண்காணிக்க முடியாது). எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோத னையிடும் அதிகாரம் ராணுவத்துக்கு உண்டு. சித்ரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர் திடீரென வீசப்படும். எல்லைக்கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால், பாஸ்போர்ட்டும் விசாவும் வாங்க வேண்டும். அங்கு துப்பாக்கிச் சத்தம் கேட்காத நாள் என ஒருநாள்கூட இல்லை!" என்கிறார்.


தற்போதைய பிரச்னையின் தொடக்கம் எது? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும் அதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினோம். "கடந்த ஏப்ரல் மாதம் மச்சில் என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500 ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர். 'அவர்கள் தீவிரவாதிகள்' என வழக்கம்போல ராணுவம் அறிவித்தது. ஆனால், அது அப் பட்டமான கொலை என்பதும், தங்களின் பதவி உயர்வுக்காக ராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இளைஞர்கள் முன்னணியில் இருந்து ஆக்ரோஷத்துடன் போராடினார்கள். ஆனால், ஆயுதப் போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்பதாகவோ இல்லை. போராட்டம், தன்னெழுச்சியான தெருச் சண்டையாக இருந்தது. இளைஞர்கள் திரண்டு நின்று, ஆயுதம் தாங்கிய படை வீரர்கள் மீது கற் களை வீசித் தாக்கினார்கள். அவர்கள் மீது துணை ராணுவப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட் டில், கடந்த 60 நாட்களில் மட்டும் 52 பேர் கொல் லப்பட்டு இருக்கின்றனர். அதில் சிறுவர்களும் அடக்கம். இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும், கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர். காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர். போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக்கூடங்களை அமைத்துள்ளனர். காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.




விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி, கடும் அடக்குமுறை, மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள். வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோஷமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி. ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. 'வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது, லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது' என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச் னையைத் தீர்க்காது. அங்கு நடப்பது அரசியல் போராட்டம். முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண் டும்.



தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்தத் திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடி யாது. ஏனெனில், அது யார் சொல்லியும் தொடங் கியது அல்ல; இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே மக்களுக்காக மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது? ஒரே வழி, அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்ப்பதுதான்!" என்கிறார் மார்க்ஸ்.

அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படி யேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!

Saturday, August 14, 2010

காவலனாக மாறியது காவல்காரன்

kaavalan





விஜய் - அசின் நடிக்கும் புதிய படத்தின் பெயர் காவல் காதல். இந்த படத்தின் பெயர் தற்போது 3 வது முறையாக மாறியுள்ளது. சித்திக் மலையாளத்தில் இயக்கிய பாடிகார்ட் என்ற படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் இயக்குனர் சித்திக்கே இயக்கி வருகிறார். விஜய்க்கு தகுந்தாற் போல் கதையையும் மாற்றி அமைத்துள்ளார் சித்திக். இப்படத்திற்கு முதலில் காவல்காரன் என பெயரிடப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், என்ன பெயர் வைப்பது என்ற கழப்பத்துடனேயே சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு வழியாக படத்திற்கு காவல் காதல் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த தலைப்பில் விஜய்க்கு திருப்தி ஏற்படாததால், தற்போது காவலன் என 3வது முறையாக படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் சித்திக் அறிவித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Friday, August 13, 2010

எண்ணிக்கை






சே! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்...?



இப்படி எனது எண்ணிக்கையை நான் எப்போதுமெ சலித்துக்கொண்டதில்லை. சிறு வயதிலிருந்தெ எனது எண்ணிக்கை பழக்கம் துவங்கியதாக பாட்டி அடிக்கடி கூறுவாள். இரவு முழுவதும் வானத்து நட்சத்திரங்களை எண்ணுவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதையும், அரிசியில் கலந்து போன பருப்புகளை எண்ணிக்கையோடு சேர்ப்பதையும் அனைவரும் வீட்டிற்க்கு வந்து அதிசயமாக பார்த்து சென்றதாக் மிக பெருமையோடு சொல்லிக்கொண்டிருப்பள்.



அப்பாவிற்க்கோ தனது பையன் இப்படி சமர்த்தக இருந்ததில், அனைவரிடமும் தம்பம் அடித்து கொள்வதையும், வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சவால் விடுவதும், என்னிடம் பல விதமான எண்ணிக்கைகளின் புதிர்களை கேட்டும் நான் சொல்லும் பதில்களுக்கான எதிர் சவால் விடுவதுமாக இருந்தார்.



ஐந்தாம் வகுப்பு கூட முடிக்காத எங்கள் கிராமத்தில் யாருக்கும் எதிர் சவால் விடுவதில் தைரியம் இல்லை. இதனால் தான் என்னவோ என்னை மிக எளிதாக பக்கத்தில் உள்ள ட்வுன் பள்ளியில் இடம் கிடைத்தது. எங்கள் ஊர் தலைவர் தான் பள்ளிகூடத்தில் கொண்டு சேர்த்தார்.



அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக பிடித்த மாணவனக இருந்ததில், பல பையன்களின் அன்புத்தொல்லைகளை தாங்க வேண்டியிருந்த்தது. சில கடைசி பென்ச் மாணவர்கள் மட்டும் என்னை கவிழ்பதில் சமயம் பார்த்து கொண்டிருந்தனர்.

அன்று எந்த ஆசிரியரும் வராத காரத்தினால் எல்லொரையும் பி. டி கிளாசிற்க்கு வருமாறு அறிவுப்பு வந்திருந்தது. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. இன்று நிச்சயமாக முத்துசாமி சொன்ன பந்தயதில் ஜெயித்து விடலாம். பந்தயம் என்னவென்றால் வேப்ப மரதிலிருந்து கீழ் விழும் இலைகளை அதிகமான எண்ணிக்கையில் யார் எடுப்பது என்பது தான்.



முத்துசாமி, கணேசன், தங்க ராசு எல்லோரும் சேர்ந்து கொண்டோ ம். முத்து சாமி தான் எண்ண ஆரம்பித்திருந்தான்.ஐம்பது, ஐம்பத்தி ஒன்று,.....ஒரே மூச்சில் நானும் எண்ண ஆரம்பித்திருந்தேன். என்னை சுற்றியிருந்த எல்லா சத்தங்களும் அடங்க தொடங்கின. எனது ஒரே குறியாக இலைகளை எண்ணுவதிலேயெ இருந்தது.



லேசாக இருட்டிக்கொண்டு வருவாதாக எனக்கு பட்டது. எப்போது படுத்தேனொ தெரியாது. முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க வாட்சுமேன் எழுப்பிய போது தான் தெரிந்தது காலை ஆகி விட்டதென்று. வாட்சுமேன் பக்கத்தில் அம்மாவும் நிற்பது தெரிந்த போது தான் விசயம் தெரிந்தது. வீட்டில் என்னை நேற்று முழுவதும் தேடியிருக்கவேண்டும். அந்த கவலை அம்மாவின் வீங்கிப்போன முகத்திலெ தெரிந்தது. இரவு முழுதும் அழுதிருக்கவேண்டும். அம்மா என்னை அணைத்துக் கொண்டு அழைத்துப் போனாள். மஞ்சள் வாசம் வீசியது.



அப்போது தான் சட்டென்று நினைவிற்க்கு வந்தது. 1887 நேற்று நான் எண்ணிக்கையில் விட்ட இலைகள். நிச்சயமாக முத்துசாமியொ, தங்கராசோ இந்த எண்ணிக்கையை அடைந்திருக்க முடியாது.



இப்படியெ எனது எண்ணிக்கை பயணம் கல்லூரி வரை தொடர்ந்தது. கல்லூரியில் பலரது காதலுக்கு எனது எண்ணிக்கை பயன் பட்டது. தனது காதலி எத்தனை தடவை மஞ்சள் புடவை போட்டிருந்தால் என்பதில் இருந்தது அவள் எத்தனை தடவை நாக்கு கடித்தாள் என்பது வரை என்னிடமிருந்து எண்ணிக்கை கணக்குகள் சென்று கொண்டிருந்தன.



அன்றும் அப்படித்தான் யாருடையொ காதலியின் ஏதோ எண்ணிக்கையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவன் சரியாக கேட்காமல் திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்ததால் எரிச்சலடைந்து சற்று சத்தமாகவெ சொல்லிவிட்டேன். திடீரென என் பின்னாலிருந்து ஒரு செருப்பு என் முதுகை தாக்கியது. திரும்பி பார்த்தேன். என் கண்கள் அப்படியெ நின்று போனது. நான் சொன்ன ஒரு எண் அவளுடைய எதோ ஒரு அளவு எண்ணிக்கையில் ஒத்து போனதில், அவளுடய செருப்பு என் மேல் விழுந்திருக்கிறது. மேலும் அவள் என்னை எதேதோ சொல்லி என்னை திட்டி கொண்டிருப்பதையும், எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டிருப்பதையும், நான் நினைவுக்கு வந்த பிறகெ தெரிந்தது. மொத்தமாகவெ என்னை அவளிடம் இழந்திருந்தேன்.



பிறகு மகேந்திரன் சொல்லிதான் அவள் பெயர் மதுமதி என்பதும், அவள் இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கிறாள் என்பதும் தெரிந்தது.பிறகு அவளை நான் எனது எண்ணிக்கை புலமை மூலம் அசத்தியதையும், அவள் என்னுடன் தனது வீட்டை விட்டு வந்ததையும், அவள் வீட்டார் திரும்பவும் என்னை தேடி வந்து கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதையும் எழுதுவதற்க்கு குறைந்தது நாற்பது வரிகளவாது தேவைப்படும். இப்போது வேண்டாமே...



இதோ கல்யாணமாகி ஆறு மாதங்களாகி விட்டது. மது என்னுடன் மிக சந்தோசமாகவே இருக்கிறாள். முத்துசாமி, தங்கராசு, கணெசன், மகேந்திரன் நம்மை பார்ப்பதற்க்காக வந்திருக்கிறார்கள். பழைய விசயங்களை நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.



மறு நாள் காலை எழுந்தவுடன், நீச்சல் குளம் செல்வதென முடிவு செய்தோம். முத்துசாமி தான் கிராமத்தில் நான் தான் எப்பொதும் அதிக நேரம் தண்ணிரீல் இருப்பேன் என்றும், எண்ணிக்கையில் ஒரு தடவை 999 வரை சென்றதாகவும் ஞாபகப்படுத்தினான். எனக்கு பெருமையாக இருந்தது. இன்றும் அதெ போல் தண்ணீரில் யார் அதிக நேரம் மூழ்கி இருக்கபோவதென பந்தயம் செய்து கொண்டோம்.



மார்கழி மாதமாக இருந்ததில் நீச்சல் குளத்தில் அதிகம் பேர் இல்லை. நாங்கள் எங்கள் எண்ணிக்கையை ஆரம்பித்தோம். இந்த தடவை கணேசன் எண்ண ஆரம்பித்திருந்தான். 15, 16, 17, ...



நானும் எண்ணிக்கையை ஆரம்பித்தென். முதலில் கொஞ்சம் மூச்சையடைத்து, இருந்தாலும் எனது எண்ணிக்கையை தொடர்ந்த்து கொண்டிருந்தேன். 960...., 989.....................................999, 1000, 1001, 1002........... மிகவும் சந்தோசமாக இருந்தது. நிச்சயமாக வேறு யாரும் இவ்வளவு நேரம் இருந்திருக்க முடியாது.



வீட்டிற்க்கு வந்த போது வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. நிச்சயமாக மதுவுடைய சொந்தங்களாக இருப்பார்கள். கடந்த இரண்டு மாதங்காளாகவெ இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவளை தேடி அவள் சொந்தகாரர்கள் வருவதும், போவதும்.

இந்த தடவை எங்கள் வீட்டில் இருந்தும் வந்திருந்தனர். மது கொஞ்ச அதிகமாகவே அழுதிருந்தாள். கண்களுக்கு கீழெ கருமை நிரம்பி.... இருந்தாலும் அழகாகவே இருந்தாள். அவள் அருகில் அவளுடைய மாமா பையன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தான். அவனைதான் மதுவுக்கு கட்டுவாதாக இருந்தது. ஆனால் நமது காதல் கல்யாணத்தில் எல்லாம் நின்று போனது. அதற்கு பிறகு இப்போது தான் இவனை பார்க்க முடிந்தது.



அவள் அழுகும் போது இவன் அவளின் தலையை கோதிவிடுவதும். அழுகை அதிகரிக்க அதிகரிக்க அவளை லேசாக அணைத்துக் கொள்வதுமாக இருந்தான். அவன் முகத்தில் அதிகப்படியான சிரிப்பு புதைந்திருந்தது.



என் தலைக்கு மேல் உள்ள குத்துவிளக்கு அணைந்து போயிருந்தது. நான் வாங்கியிருந்த எல்லா பரிசுகளையும் யார் யாரோ பார்த்துகொண்டிருந்தார்கள். வேன் வந்து விட்டதாக யாரோ கூறிய போது மது அதிகமாக கதறி அழுதாள். இப்போது அவன் மதுவை இருக்கமாக கட்டிக்கொண்டான்.



சே..! ஆயிரத்தோடு நிறுத்தியிருக்கலாம்..

Tuesday, August 10, 2010

சிறப்புக் களம்




வெண்கலச் சிலை வார்ப்பு ( Bronze Statues)

ஆக்கம்: viggie - நாள்: 02 Dec, 2008





வெண்கலத்தை உபயோகித்துச் சிலைகள் செய்வது எல்லா பழங்காலந்தொட்டே இருந்து வருகிறது.வியக்க வைக்கும் நுட்ப வேலைப்பாடுகளும், உருவ வளைவுகளும் மிகப் பழங்காலச் சிலைகளிலேயே காணப்படுகின்றன.

சிலை வார்ப்பு



வெண்கலச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின் றது. 'செர்-பர்டியூ' என்பது பிரெஞ்சு வார்த்தை, செர் என்றால் மெழுகு, பெர்டியூ என்றால் தொலைந்த (lost) என்று அர்த்தம் கொள்ளலாம். சமஸ்கிருதத்தில்

'மதுசிஷ்டவிதானா' என்று பெயர்

Saturday, August 7, 2010

YouTube - Tamil Song

YouTube - Tamil Song

மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மிரட்டல்: ரயில்வே ஊழியர்களை கடத்தி அட்டூழியம்

புருலியா :மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில், ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட, நான்கு பேரை கடத்திச் சென்ற நக்சலைட்கள், "லால்கார்க்கில் நாளை நடக்கும் மம்தா கட்சி பேரணியின் கலந்து கொள்ளக் கூடாது' என, மிரட்டல் விடுத்தனர். அதே நேரத்தில், பீகாரில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ரயில் நிலையத்தை கிராம மக்கள் சூறையாடினர்.மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் உள்ளது உர்மா ரயில் நிலையம். நேற்று முன்தினம் இரவு இங்கு புகுந்த ஆயுதம் தாங்கிய நக்சலைட்கள், ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் ஆதித்யா கெர்கெட்டாவை சிறை பிடித்தனர்.




பின்னர் சில பத்திரிகை நிருபர்களுக்கு போன் செய்யும்படி அவரை மிரட்டினர்."லால்காரில் நாளை நடக்கும் மம்தா கட்சி பேரணியில் யாரும் பங்கேற்கக் கூடாது' என, மிரட்டல் விடுக்கும்படி அவரிடம் தெரிவித்தனர். அவரும் அதன்படியே செய்தார்.பின்னர் கெர்கட்டாவைவும், ஸ்டேஷனில் இருந்த மேலும் மூன்று ரயில்வே ஊழியர்களையும் ரயில் நிலையத்துக்கு வெளியே சிறிது தூரம் கடத்திச் சென்றனர். அங்கு, "மம்தாவின் பேரணியில் ரயில்வே ஊழியர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என, எச்சரித்து மூவரையும் விடுவித்தனர்.வந்தவர்கள் நக்சலைட்கள் என்பதை தெரிவிக்கும் வகையிலும், மம்தா கட்சி பேரணியில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என, மிரட்டல் விடுக்கும் வகையிலும் அச்சிடப்பட்டிருந்த சில போஸ்ட்களையும் அவர்கள் விட்டுச் சென்றனர்.இரவு நேரத்தில் உர்மா ரயில் நிலையம் வழியாக எந்த ரயிலும் செல்லக் கூடாது என்றும் கெர்கெட்டாவை அவர்கள் மிரட்டினர்.





ரயில் நிலையம் சூறை: பீகார் மாநிலம், முங்கர் மாவட்டம் கஜ்ரா ரயில் நிலையத்தில், ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கும் வெளியூரிலிருந்து வந்த சிவபக்தர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.இதில், உள்ளூர்வாசி ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். மூன்று சிவபக்தர்களும் காயமடைந்தனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் தாக்கப்பட்டதையறிந்த கிராம மக்கள், கஜ்ரா ரயில் நிலையத்துக்குள் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரயில்வே சொத்துகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். ரயில் நிலையத்தை சூறையாடினர். சம்பவம் பற்றி அறிந்த போலீசார், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.