Monday, May 16, 2011

கம்ப்யூட்டர் செய்திகள்........

கேள்வி: அலுவலகக் கம்ப்யூட்டரில் சில பெர்சனல் பைல்களை, ஆடியோ, வீடியோ பைல்களைச் சில வாரங்களுக்கு சேவ் செய்து வைத்திட விரும்புகிறேன். இவற்றை மற்றவர்களின் கண்களில் பயன்படாமல் பாதுகாப்பது எப்படி? விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 3 யுடன் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ளது.


-பெயர் தராத வாசகர், திருப்பூர்.

பதில்: நீங்கள் பெயர் தரவில்லை என்றாலும், இந்த கேள்வி பல வகைகளில் கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வந்துள்ளன. எனவே பதில் அளிக்கிறேன். பைல்களை மறைத்து வைக்க சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பாதுகாப்பானவை என்று 100% சொல்ல முடியாது. எனவே விண்டோஸ் சிஸ்டம் தரும் உதவியைப் பார்க்கலாம். விண்டோஸ் (டாஸ்) கட்டளைகளில் Attrib என்ற கட்டளை இதற்கு உதவும். Attrib என்பது ஒரு பைலுக்கு நாம் தரும் பண்புகளைக் குறிக்கும். இவை Read only, Hidden and System attributes என வகைப்படும்.

முதலில் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்து கொள்ளுங்கள். மறைக்க வேண்டிய பைல்களை எல்லாம் ஒரு போல்டரில் போட்டு வைக்கவும். அது E: ட்ரைவில் Personal என்ற பெயரில் இருக்கட்டும். எந்த பெயரையும் தரலாம். பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMDஎன டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt)கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib +s +h E:\Personal” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை உ டிரைவில் மறைத்து வைத்திடும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம். இவ்வாறு மறைத்து வைத்திருப்பதை “Show hidden files and folders” என்ற கட்டளை கொடுத்தெல்லாம் பார்க்க முடியாது. இதனைப் பின்னர் வேண்டும் என்று எண்ணுகையில்“attrib s h D:\Data” , எனக் கட்டளை கொடுக்க வேண்டும். அப்போது இந்த போல்டர் காட்டப்படும்.



கேள்வி: வை-பி இயக்கம் குறித்து விளக்கம் தரவும். ஒரே மாதிரியான சாதனங்களைத் தான் இந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இணைக்க முடியுமா? வெவ்வேறு வகையான சாதனங்களையும் இணைக்க முடியும் என்றால் வழி என்ன?

-எஸ். சம்சுதீன், கோயம்புத்தூர்.

பதில்: இதற்கான பதிலை முன்பு ஒருமுறை கம்ப்யூட்டர் மலரில் தந்துள்ளேன். இருப்பினும் தாங்கள் கூடுதலாகக் கேட்ட சில விஷயங்களையும் இணைத்து இங்கே விளக்குகிறேன்.

வை-பி (WiFi– Wireless Fidelity) என்பது ஒரு வகையான நெட்வொர்க். தொழில் நுட்ப ரீதியாகச் சொல்வ தென்றால் இதை 802.11 நெட்வொர்க் என அழைப்பார்கள். இந்த நெட்வொர்க்கில் பல டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும். கம்ப்யூட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், மியூசிக் பிளேயர்கள், மொபைல் போன்கள் ஏன் சில இடங்களில் டிவிக்கள் கூட இதில் இயங்கும். எடுத்துக் காட்டாக உங்கள் கம்ப்யூட்டர் வை-பி யில் இயங்கக் கூடியது என்றால் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில், இதனை ஹாட் ஸ்பாட் என அழைப்பார் கள், உங்களால் இன்டர்நெட்டில் நுழைந்து இயங்க முடியும். இத்தகைய ஹாட் ஸ்பாட்கள் இன்று விமான நிலையங்கள், காபி ஷாப்கள், இரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற இடங்களில் உள்ளன. பொதுமக்களுக்கு இந்த இடங்களில் வை-பி இணைப்பு இலவசமாகவே கிடைக்கிறது. இந்த தொழில் நுட்பம் பலர் ஒருவருக்கொருவர் தங்களை இணைத்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது. WiFi எனப்படும் இந்த சொல் தொடர் WiFi Alliance என்ற நிறுவனத்தால் நமக்குக் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து பலவகை டிஜிட்டல் சாதனங்களை வை-பி இணைவு பெற்றது எனச் சான்றளித்து வருகிறது. அதாவது இந்த சான்றிதழ் பெற்ற எந்த ஒரு சாதனமும் அ தேபோல் சான்றிதழ் பெற்ற இன்னொரு சாதனத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக நீங்கள் எச்.பி. நிறுவனத்திடம் இருந்து வை-பி இணைவு தன்மையுடன் கூடிய லேப் டாப் வாங்கியிருக்கலாம். சோனியிடமிருந்து இதே தன்மையுடன் கூடிய டிஜிட்டல் கேமரா வாங்கியிருக் கலாம். இந்த இரண்டும் வை-பி நெட்வொர்க் இயங்கும் இடத்தில் எந்த வயர் தொடர்பும் இன்றி இணைப்பு பெற்று இயங்கும்.



கேள்வி: பயர் வால் பாதுகாப்பு கம்ப்யூட்டரில் உள்ளது. ஆனால் பல வேளைகளில், இதனால், செயல்படுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே வேகமாகச் செயல்பட வேண்டும் என எண்ணுகையில் இதன் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்த முடியுமா? அதற்கான செட்டிங்ஸ் என்ன?

-சே. அன்புக்குமார், மதுரை.

பதில்: பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். அதற்கான செட்டிங்ஸ் இதோ.

1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.

2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீது கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந் தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்







விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல செய்திகள் வராமல் இருந்தாலே நல்லது என்று நினைக் கிறார்கள். அவர்களுக்கான தகவல் இது. இது போன்ற செய்திகள் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு களைப் பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவில் My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும்.

2.அடுத்து மெனுவில் System Properties விண்டோ திறப்பதற்காக Properties பிரிவில் கிளிக் செய்திடவும்.

3. கிடைக்கும் விண்டோவில் Advanced டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. இந்த அட்வான்ஸ்டு டேப்பில் கிடைக்கும் விண்டோவில் Error Reporting என ஒரு பட்டன் கிடைக்கும்.

5.இப்போது எர்ரர் ரிபோர்ட்டிங் விண்டோ கிடைக்கும். பின் இதில் Disable Error Reporting என்று இருப்பதனை செலக்ட் செய்திடவும். இதனைக் கிளிக் செய்தால் அனைத்து எர்ரர் செய்திகளும் காட்டப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு சில முக்கியமான பிரச்சினைகள் உள்ள எர்ரர் செய்திகள் காட்டப்படும். எதுவும் வேண்டாமப்பா! ஆளை விடுங்க!! என்று எண்ணுபவரா நீங்கள். அப்படி என்றால் But notify me when critical errors occur என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள்.

6. இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இனி எர்ரர் செய்திகள் நீங்கள் செட் செய்தபடி மட்டுமே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் இருக்கும்







கர்சர் பெரிதாக வேண்டுமா?

உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் கர்சர் பெரியதாகவும், உங்களுடைய கம்ப்யூட்டரில் சிறியதாகவும் இருக்கிறதே என்று உங்களுக்குக் கவலையாக உள்ளதா? சற்றுப் பெரியதாக கர்சர் இருந்தால் தேவலாம் என்று எண்ணுகிறீர்களா? இந்த ஆசையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்டார்ட் பட்டனை முதலில் அழுத்தி அதிலிருந்து மேலெழும் கட்டத்தில் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல் பேனல் (Settings, Control Panel.) செல்லவும். அதில் மவுஸ் ஐகான் (Mouse icon) என்றிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள பாயிண்ட்டர்ஸ் (Pointers) என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு ட்ராப் பாக்ஸ் கிடைக்கும். அதன் தலைப்பாக “Scheme.” என்ற சொல் இருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் இயக்கும் விண்டோஸ் தொகுப்பிற்கேற்ற வகையில் Windows Standard (extra large) (system scheme) அல்லது Windows Standard (large) (system scheme) என ஒன்று இருக்கும். இதில் எந்த திட்டம் உங்கள் கணிப்பொறியில் இருந்தாலும், அது வழக்கமான கர்சரைக் காட்டிலும் சற்றுப் பெரிய கர்சரையே கொடுக்கும். மேலும் பல வகையான கர்சர்களை அங்கு பார்க்கலாம். தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கர்சர் நீங்கள் தேர்ந்தெடுத்த அளவில், வகையில், தோற்றத்தில் இருப்பதனைக் காணலாம்.



கண்ட்ரோல் + இஸட்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த கீ சேர்க்கை விண்டோஸின் அனைத்து பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் செயல்படும். எடுத்துக் காட்டாக, டெஸ்க் டாப் திரையில் ஐகான் ஒன்றைப் பதிக்கிறீர்கள். அதனை வைத்தது தவறு என்று அடுத்த கணம் எண்ணினால், உடனே கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்துங்கள். ஒட்டி வைத்த ஐகான் மறைந்து போகும். விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரிலும் இது செயல்படும். எடுத்துக்காட்டாக பைல் ஒன்றை அழிக்கிறீர்கள். பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும் என , அதனை மீட்க எண்ணினால் ரீசைக்கிள் பின் தேடிப் போக வேண்டாம். கண்ட்ரோல் + இஸட் கீகளை அழுத்தவும். பைல் உடனே கிடைக்கும். ஆனால் நீங்கள் பைலை அழிக்கும்போது, ரீசைக்கிள் பின் தொட்டிக்கு அது போகக் கூடாது என எண்ணி ஷிப்ட் கீயைச் சேர்த்து அழுத்தியிருந்தால் கண்ட்ரோல் +இஸட் கீயை அழுத்தினாலும் பைல் கிடைக்காது.



டூல் பார் பட்டன்கள்

உங்கள் டூல் பாரில் உள்ள பட்டன்கள் சிறியதாக உள்ளதே என்று கவலையாக உள்ளதா? அவற்றைப் பெரியதாக வைத்து இயக்க விருப்பமா? கீழே குறிப்பிட்டுள்ளவாறு செயல்படுங்கள். டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அங்கு (Customize) என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது ஏதேனும் டூல்பாரில் வலதுபுறமாக மவுஸைக் கிளிக் செய்திடவும். அதன்பின் வரும் பிரிவுகளில் (Customize) ஐத் தேர்ந்தெடுக் கவும். பின் கிடைக்கும் விண்டோவில் (Options tab) பிரிவில் பார்த்தால் அங்கு (Large Icons) என்ற சொற்களுக்கு எதிரே ஒரு சிறிய கட்டம் கிடைக்கும். அதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். உடனே பட்டன்கள் அனைத்தும் பெரியதாக இருக்கும். டெக்ஸ்ட் அப்படியே தான் இருக்கும். இந்த பட்டன் அளவு உங்களுக்குப் பிடித்தால் குளோஸ் (Close) பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி பட்டன் புதிய அளவிலேயே இனி இருக்கும். இது உங்களுக்குப் பிடிக்க வில்லை என்றால் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். மீண்டும் பழைய அளவிலேயே இருக்கும். இதில் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த செயல்பாட்டினை எந்த விண்டோஸ் தொகுப்பில் மேற்கொண்டாலும், அது அனைத்து விண்டோஸ் தொகுப்பிலும் எதிரொலிக்கும். எடுத்துக்காட்டாக வேர்ட் தொகுப்பில் மேற்கொண்டாலும், பிற எக்ஸெல் போன்ற ஆபீஸ் தொகுப்புகளிலும் இந்த பெரிய பட்டன்கள் கிடைக்கும்.











No comments:

Post a Comment