09 March, 2011 by admin
நேற்று முன்தினம் அனுராதபுரம் நொச்சியாகமப் பகுதியில் மாலை 4.00 மணியளவில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறி வாத்தி அவர்களின் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவரே கூறியுள்ளார். 2 கைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், துப்பாக்கிப் பிரயோகங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நின்றுவிடாது, தமிழ் அரசியல் எதிரிகளே அவர் வாகனத்தைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை சேதத்துக்கு உள்ளான அவரது வாகனத்தின் படங்கள் எதுவும் இணையத்தில் வந்ததாகத் தெரியவில்லை. அவர் சயிக்கிள் பசிசளிக்கும் போதும், பப்பு செட் கொடுக்கும் போதும், மற்றும் புத்தங்களை ஏழைக்கு வழக்கும் போதும் படம் படமாக எடுத்து வெளியிட்ட பல இணையங்கள், தாக்குதலுக்கு உள்ளான வாகனத்தின் புகைப்படங்களை ஏன் எடுத்துப் போடவில்லை என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.
இதில் இதரக் கட்சிகள், அரசியல் அமைப்புகள், தனி மனிதர்கள் என பலரும் இத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது இன்றுவரை ஆதாரபூர்வமாக ஏன் வெளிவரவில்லை. எப்போதும் ஒரு கமராவோடும், கையடக்க கணணியோடும் செல்லும் சிறி வாத்தி அவர்கள் ஏன் தனது வாகனத்தை படம் எடுத்து இணையங்களுக்கு அனுப்பவில்லை என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் இறந்ததைக் கூட பிரேக்கிங் செய்தியாகப் போடாமல் சாதாரன செய்தியாப் போட்ட ஒரு இணையம், தற்போது சிறி வாத்தி வாகனம் தாக்கப்பட்டதை பிரேக்கிங் செய்தியாகப் போட்டு மகிழ்ந்தது.
அது சரி ! சும்மாவா சொன்னார்கள் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ! நடக்கட்டும், இத் தகவலை நாம் எழுதியுள்ளதால் இனி சில இணையங்கள் விரைவாகச் செயல்பட்டு அப்படங்களை எடுத்துப் போடுவார்களோ தெரியவில்லை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
total waste
ReplyDelete